ADDED : டிச 06, 2024 06:13 AM

போடி: சமீபத்தில் பெய்த மழையால் போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் நெல் நடவு பணிகள் முடிந்த நிலையில் தற்போது நெல் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.
கடந்த அக்., மாதம் பெய்த மழையால் சாமிகுளம் சங்கரப்பன் கண்மாய், செட்டிகுளம், பங்காருசாமி, மீனாட்சியம்மன் கண்மாய்களில் நீர்த்தேக்கம் அதிகரித்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனையொட்டி மீனாட்சிபுரம், பொட்டல்களம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கண்மாயில் தொடர்ந்து நீர் தேங்கி வருவதால் ஆண்டு தோறும் ஒரு போக நெல் சாகுபடி இப்பகுதியில் சிறப்பாக நடைபெறும். நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்யும் பணி 25 முதல் 35 நாட்கள் வரை நடக்கும்.
அக்., நெல் நடவு பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது பயிர்கள் வளர்ந்து நெல் வயல்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.