நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் தாலுகா வாரியாக நாளை ( டிச.,13) ரேஷன் பொருட்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள், நுகர்வோர் ரேஷன் பொருட்கள் விநியோக புகார், குறைகள், கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என கலெக்டர்
ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். முகாம் நடைபெறும் இடங்கள் தேனி தாலுகாவிற்கு உப்பார்பட்டி, பெரியகுளம் தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி கொப்பையன்பட்டி, உத்தமபாளையம் குள்ளப்பகவுண்டன்பட்டி, போடி கொட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் நடக்கிறது.

