/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ரயில்வே குட்ஷெட் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு அகற்றம்
/
தேனி ரயில்வே குட்ஷெட் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு அகற்றம்
தேனி ரயில்வே குட்ஷெட் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு அகற்றம்
தேனி ரயில்வே குட்ஷெட் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு அகற்றம்
ADDED : டிச 12, 2025 06:30 AM

தேனி: தேனி ரயில்வே குட்ஷெட் ரோட்டின் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய மாடிவீடு உயர்நீதிமன்ற மதுரை கிளை, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததால் ரயில்வே துறை அதிகாரிகள் மண் அள்ளும் இயந்திரங்களால் நேற்று, இடித்து அகற்றினர்.
பெரியகுளம் ரோட்டில் முகப்புப் பகுதியில் இருந்து ரயில்வே சரக்கு முனையம் வரை 700 மீட்டர் நீளத்தில் குட்ஷெட் தெரு அமைந்துள்ளது. குட்ஷெட் மையம் அமைந்த பின் ரயில்வே நிர்வாகம் 2023ல் ரோடு அமைத்தது.
பின் ரோட்டில் இருபுறங்களில் இருந்த 74 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அகற்ற கோரினர். அதில் 73 பேர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றனர். அதன் பின் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கியிருந்த சிறிய அளவிலான கட்டடங்களை ரயில்வே துறையால் இடித்து அகற்றின.
அதன் பின் முகப்பு கேட்டில் இருந்து ரோட்டின் வலது புறத்தில் 240 மீட்டர் துாரத்தில் அமைந்துள்ள முனியாண்டி என்பவர் கட்டிய வீடும் ஆக்கிரமிப்பில் ரயில்வே புறம்போக்கு நிலத்தில் இருப்பதால் அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முனியாண்டி தரப்பினர் மனு செய்தனர். மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்ற ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.
இதனால் முனியாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மேல் முறையீடு செய்தார். உயர்நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனால் மதுரை ரயில்வே கோட்ட மண்டல மேலாளர் எல்.எல்.ராவ் உத்தரவில், ரயில்வே உதவிப் பொறியாளர் சரவணன் தலைமையில், தலைமைப் பிரிவு பொறியாளர் சுந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ரயில்வே, தேனி போலீஸ் பாதுகாப்புடன் 2 மண் அள்ளும் இயந்திரங்களினால் மாடி வீடு இடித்து அகற்றப் பட்டன.

