/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் மாவட்டத்தின் முதல் நாய்கள் காப்பகம்; கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்
/
ஆண்டிபட்டியில் மாவட்டத்தின் முதல் நாய்கள் காப்பகம்; கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்
ஆண்டிபட்டியில் மாவட்டத்தின் முதல் நாய்கள் காப்பகம்; கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்
ஆண்டிபட்டியில் மாவட்டத்தின் முதல் நாய்கள் காப்பகம்; கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல்
UPDATED : டிச 12, 2025 07:54 AM
ADDED : டிச 12, 2025 06:29 AM

தேனி: தேனி மாவட்டத்தின் நாய்க்கடி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 100 சதவீத மானியத்தில் ஆண்டிபட்டியில் மாவட்ட நாய்கள் காப்பகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.'' என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் விவசாயிகள் காளை, எருது, பசு, ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட வீட்டு விலங்கினங்களை மிக அதிகளவில் வளர்த்து வருகின்றனர். மாநிலத்தில் கால்நடை வளர்ப்பில் தேனி மாவட்டம் 2வது இடத்தில் உள்ளது. இத்துறையில் பெரியகுளம், போடி, தேனி ஆகிய 3 பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகளும், கம்பம், கூடலுார், க.புதுப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உட்பட33 கால்நடை மருந்தகங்களும் இயங்குகின்றன. இத்துறையில் கால்நடைகளின்ஆரோக்கியம், உற்பத்தித்திறன், நலன் பாதுகாக்கும் நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துதல், நோய் சிகிச்சை, பால் பண்ணை வளர்ச்சி, தீவன மேம்பாடு, இனப்பெருக்கம்,கால்நடை வளர்ப்பின் மூலம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் என பல்வேறு சேவைகள் விவசாயிகளுக்கு இத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
ஒரு கால்நடை டாக்டர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் என மூவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் உதவியாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இத்துறையின் வளர்ச்சிப்பணிகள், நாய்கள் காப்பகம் உள்ளிட்டவை குறித்து தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக இணை இயக்குனர் இளங்கோவன் பேசியதாவது:
லோயர்கேம்ப், போடியில் வெக்கை நோய் தடுப்பு மையங்கள் இயங்குகிறதா. தடுப்பு மையங்கள் இயங்குகிறது. கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கால்நடைகளுக்கு வெக்கை நோய் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுகிறது. அதுபோல் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் கால்நடைகளுக்கும் பரிசோதனை செய்யப்படுவது தொடர்கிறது.
மாவட்டத்தில் தெரு நாய்களின் பிரச்னைக்கு தீர்வு என்ன உள்ளாட்சிகள் ஒத்துழைப்புடன் குறிப்பாக நகராட்சிகள் ஒத்துழைப்புடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நாய்களின் வெறிநோய் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டன. அறுவை சிகிச்சை தேவைப்படும் உள்ளாட்சிகள் முறைப்படி கடிதம் வழங்கினால் அறுவை சிகிச்சைக்கு கலெக்டர் ஒப்புதலில் ஏற்பாடு செய்யப்படும்.
புதிய கால்நடை மருந்தகங்கள் வர வாய்ப்பு உள்ளதா டொம்புச்சேரி, புதிப்புரம் ஆகிய 2 இடங்களில் புதிய கால்நடை மருந்தகங்கள் வர உள்ளன. தலா ரூ.50 லட்சம் செலவில் அதற்கான கட்டங்கள் கட்ட பணிகள் துவங்ககப்பட்டு உள்ளன. ஆறு மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
நாய்களுக்கான நிரந்தர காப்பகம் அப்பணிகள் பற்றி தெரு நாய்களுக்கான நிரந்தர காப்பகங்கள் தொடங்குவதற்கு தன்னார்வ நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருந்தோம். அதில், ரூ.50 லட்சம் முழு நிதியுதவி வழங்கப்படும். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனால்ஆண்டிபட்டியில் ஜெயஜோதி என்பவர் கால்நடை பராமரிப்புத்துறை கண்காணிப்பில் நாய்கள் காப்பகம் அமைக்க விண்ணப்பித்து, அவருக்கு அரசு ஒப்புதல்வழங்கியுள்ளது. விரைவில் ஆண்டிபட்டியில் முதல் மாவட்ட நாய்கள் காப்பகம் ஒரு ஏக்கரில் அமைய உள்ளது. அந்த இடத்தை ஆய்வு செய்து முடித்துள்ளோம். விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
நாய்களை காப்பகத்தில் விடுவதற்கான விதிமுறைகள் உள்ளதா இதுகுறித்து கலெக்டரின் ஆலோச னைப்படி முறைப்படி அறிவிக்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து காளை, எருது, பசு, ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடை வளர்ப்போருக்கு20 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. 20 பேர் பயிற்சி முடித்து, பயிற்சி பெற்றதற்கான அலைபேசி வழியாகபுதிய ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இதற்கு முன் இம்மாதிரியான தேர்வுகள் நடந்தது இல்லை.இதனால் இளைஞர்கள், கிராமப்புற விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான நல்ல திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

