/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை
/
சிறுமியை தொந்தரவு செய்தமளிகை கடைக்காரருக்கு சிறை
ADDED : ஜூலை 25, 2025 03:13 AM
தேனி: தேனி அருகே கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் பிளஸ் 1 படித்தார். சிறுமி வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் முதியவர் சுப்புராஜ் 69. 2023 டிச. 23ல் மாலையில் சிறுமியை தாயார் மளிகைக்கடையில் தக்காளி வாங்கிவர கூறினார். தக்காளி வாங்கச் சென்ற சிறுமியை முதியவர் சுப்புராஜ் உடலை தொட்டு தொந்தரவு செய்தார்.
இதை சிறுமி தனது தாயாரிடம் கூறினார். சிறுமி புகாரில் அல்லிநகரம் போலீசார் கடை உரிமையாளர் சுப்புராஜை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மளிகை கடைக்காரர் முதியவர் சுப்புராஜூக்கு மூன்றாண்டுகள் சிறை,ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜரானார்.