/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : நவ 07, 2024 02:18 AM
ஆண்டிபட்டி: கடந்த சில வாரங்களில் ஆண்டிபட்டி பகுதியில் பெய்த மழையால் ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டு குளங்கள் கண்மாய்களில் நீர் தேங்கியுள்ளது.
ஏற்கனவே அடுத்தடுத்து பெய்த சாரல் மழையால் ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசாரிப்பட்டி, பிச்சம்பட்டி, கோத்தலூத்து பகுதி கண்மாய்களில் ஓரளவு நீர் தேங்கியுள்ளது. கண்மாய்களில் தேங்கிய நீரால் கன்னியப்பபிள்ளைபட்டி, கோத்தலூத்து, முல்லையம்பட்டி, பிச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகள் போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. சில கிணறுகளில் நீர்மட்டம் தரைதளம் வரை உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.