sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தண்ணீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் 15 கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு

/

தண்ணீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் 15 கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு

தண்ணீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் 15 கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு

தண்ணீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் 15 கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு


ADDED : ஜூலை 24, 2025 06:35 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காத நிலை நீடிப்பதால் இப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

ஏத்தக்கோவில், போடிதாசன்பட்டி, அனுப்பப்பட்டி பகுதியில் உள்ள மலைப் பகுதியில் இருந்து மழைக் காலத்தில் கிடைக்கும் நீர் இக்கண்மாயில் தேங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை நாகலாறு ஓடையில் இருந்தும் நீர்வரத்து கிடைக்கும் படியான அமைப்புகள் உள்ளன. 40 ஏக்கர் நீர்த்தேக்க பரப்பு கொண்ட பிச்சம்பட்டி கண்மாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் தற்போது முள் செடிகள் நீர்த்தேக்க பகுதியில் புதர் போல் வளர்ந்துள்ளது. கண்மாய் நீரை பயன்படுத்தி கடந்த காலங்களில் 100க்கும் அதிகமான ஏக்கரில் நேரடி பாசனமும், பல நுாறு ஏக்கரில் இறவை பாசனமும் நடந்தது.

கண்மாயில் நீர் தேங்காததால் 3 போகம் விளைந்த நிலங்களில் தற்போது ஒரு போகத்திற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதித்ததால் அதில் தொடர்புடைய கால்நடை வளர்ப்பு தொழிலும் பாதித்துள்ளது. கடந்த முறை தேர்தல் வாக்குறுதியில் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களுக்கும் பெரியாறு அணை உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து தேக்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். அதற்கான நடவடிக்கைதான் இல்லை. விவசாயத்தை காக்க கண்மாயில் முழு அளவில் நீரைத் தேக்குவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

தடுப்பணையில் தேங்கும் நீர் வச்சிரவேல், முன்னாள் தலைவர், பிச்சம்பட்டி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம், ஆண்டிபட்டி: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கவில்லை. மழைக் காலத்தில் கண்மாயில் தேங்கும் குறைந்த அளவு நீரை நேரடி பாசனத்திற்கு பயன்படுத்தினால் சில வாரங்களில் வற்றிவிடும் என்பதால் மடை திறந்து பயன்படுத்துவது இல்லை. கண்மாய் மடை, நீர்வரத்து வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி சிதிலமடைந்து வருகிறது. ஏத்தக்கோவில் மலைப் பகுதியில் இருந்து வரும் நீர் ரெட்டையாகுளம், தீர்த்த ஆலமரம் அருகே கட்டப்பட்டு உள்ள தடுப்பணையில் தேங்குவதால் கண்மாய்க்கு வரும் நீர் குறைகிறது.

ஓடையில் வரும் நீரை அப்பகுதி விவசாயிகளும் தங்களுக்கு சாதமாக திருப்பி பயன்படுத்துகின்றனர். இதனால் கண்மாய் பாதிப்படைவது தொடரும் நிகழ்வாக உள்ளது. நாகலாறு ஓடையில் மாயாண்டிபட்டி அருகே வாய்க்கால் அமைத்து தண்ணீர் வரும்படி திருப்பி விடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் முழுமையாக கண்மாய்க்கு சென்று சேர்வது இல்லை. பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை குள்ளப்பக்கவுண்டன் பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

கானல் நீரான திட்டம் கணேசன், காய்கறிமார்க்கெட் சங்க தலைவர், ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் வளமான மண் இருந்தும் நீர் ஆதாரம் குறைவதால் விவசாயம் கேள்விக் குறியாகிறது. விவசாயத்தை கைவிட்ட பலரும் மாற்று தொழில் தேடி வெளியூர் செல்கின்றனர். இளைய தலைமுறையினர் விவசாயத்தை கண்டு கொள்வது இல்லை. மூல வைகை ஆற்றில் இருந்து தடுப்பணை அமைத்து கால்வாய் மூலம் வரும் நீர் பாலசமுத்திரம், மரிக்குண்டு, ரெங்கசமுத்திரம் பகுதி கண்மாய்களுக்கு செல்கிறது.

குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து பெரியாறு அணை உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அதற்கான நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டி பகுதியில் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் விவசாயத்தை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us