/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குரூப் 2, 2ஏ தேர்வர்கள் பயிற்சி பெற அழைப்பு
/
குரூப் 2, 2ஏ தேர்வர்கள் பயிற்சி பெற அழைப்பு
ADDED : ஜூலை 30, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2, 2 ஏ போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஆக.,13 கடைசிநாள் ஆகும். இத்தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 30 முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பாடக்குறிப்புகள் வழங்கப்படும், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது, 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.