/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசார் கையில் கம்பு எடுக்க கூடாது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
/
போலீசார் கையில் கம்பு எடுக்க கூடாது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
போலீசார் கையில் கம்பு எடுக்க கூடாது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
போலீசார் கையில் கம்பு எடுக்க கூடாது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ADDED : டிச 02, 2024 04:22 AM
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது கையில் கம்பு எடுக்க கூடாது என பாதுகாப்பு பணி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
பணி நேரத்தில் அலைபேசியில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது கூடாது. பக்தர்களை சுவாமி என மட்டுமே அழைக்க வேண்டும். பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது ஆத்திரத்திலோ எவ்வித செயல்பாட்டில் ஈடுபட்டாலும் போலீசார் பொறுமையை இழக்கக்கூடாது.
பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தும் போது பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் போலீசார் விசில் பயன்படுத்தலாம். காக்கி பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை பரிசோதனை இன்றி செல்ல அனுமதிக்க கூடாது.
பெருவழிப்பாதை போன்ற காட்டுப்பாதையில் வரும் பக்தர்கள் காட்டு விலங்குகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க நாட்டு வெடிகளை கையில் வைத்திருப்பது கடந்த காலங்களில் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் தெரியவந்துள்ளது.
இப்படி நாட்டு வெடிகுண்டுகளுடன் பக்தர்கள் சென்று விடாமல் இருக்க பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டும்.
நிலைமைக்கு ஏற்ற செயல்பாடு போலீசாருக்கு மிகவும் முக்கியம். கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்பட்டாலும் அதை ஒழுங்கு படுத்துவதற்கு போலீசார் கையில் கம்பு எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்னடத்தை பயிற்சியில் போலீசார்
இதற்கிடையில் சன்னிதானத்தில் 18 படிகளில் போட்டோ சூட் நடத்திய 25 போலீசாருக்கு கண்ணூர் ஆயுதப்படை முகாமில் நன்னடத்தை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் பத்து வேலை நாட்களில் இவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.