/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் குஜராத் சுற்றுலாப் பயணி பலி
/
விபத்தில் குஜராத் சுற்றுலாப் பயணி பலி
ADDED : ஜன 01, 2024 06:05 AM
தேவதானப்பட்டி; குஜராத் மாநிலம் ராஜ்கோட் பக்தி நகர் சோட்டாலால் அம்ருத்லால் லுநாகரியா 67. இவர் தனது குடும்பத்தினர் நால்வருடன் இணைந்து கொடைக்கானல் சுற்றுலா சென்றனர்.
பின் மதுரை நோக்கி காரில் சென்றனர்.
தேவதானப்பட்டி ஜி.மீனாட்சிபுரம் பிரிவு அருகே காரை நிறுத்திவிட்டு, லுநாகரியா மட்டும் எதிரே உள்ள 'கறிசோறு' ஓட்டலில் டீ குடிக்க சென்றார். பின் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு நேற்று காலை 11:40 மணிக்கு திரும்பி, ரோட்டை கடந்தார். அப்போது பெங்களூரு கலசனஹல்லி ஜிஹானி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் அப்ராஜித்பால் 43, ஓட்டி வந்த கார் லுநாகரியா மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.