நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மதுவிலக்கு போலீசார் அக்., மாதம் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான மேலகூடலுார் கருப்பசுவாமி கோயில் தெரு விக்னேஷ்குமார் 21, முத்துப்பாண்டி 19 ஆகிய இருவர், உப்புக்கோட்டையில் நவீன்குமார் என்பவரை கொலை செய்த அவரது நண்பர் குணா 22 ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் விக்னேஷ்குமார், முத்துப்பாண்டி, குணா ஆகிய மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

