/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேலை கொள்முதல் செய்து அரசு வழங்காத நிலுவைத் தொகை ரூ.1 கோடி: திணறும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்
/
சேலை கொள்முதல் செய்து அரசு வழங்காத நிலுவைத் தொகை ரூ.1 கோடி: திணறும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்
சேலை கொள்முதல் செய்து அரசு வழங்காத நிலுவைத் தொகை ரூ.1 கோடி: திணறும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்
சேலை கொள்முதல் செய்து அரசு வழங்காத நிலுவைத் தொகை ரூ.1 கோடி: திணறும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்
ADDED : ஆக 07, 2025 11:58 PM
தேனி மாவட்டத்தில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி, பெடல் தறிகள் மூலம் அரசின் இலவச சேலைகள் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் சேலைகள் அரசு மூலம் அவ்வப்போது கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டு தைப்பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்., முதல் டிச., வரை உற்பத்தி திட்டம் நிர்ணயம் செய்யப்படும்.
பின் உற்பத்திக்கான நுால், பணிக்கான கூலி தொடர்ந்து நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் சேலைகளுக்கான தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு முழுமையாக அரசு வழங்காததால், ஆண்டுதோறும் நிலுவைத் தொகை அதிகரிக்கிறது. இதனால் கூட்டுறவு சங்கங்களில் நடைமுறை செலவுகளுக்கு பணம் இன்றி நிர்வாகத்தினர் திணறுகின்றனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்தாண்டில் சக்கம்பட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் கைத்தறிகளில் 36 ஆயிரம் சேலைகளும், பெடல் தறிகளில் 1.50 லட்சம் சேலைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. நடப்பாண்டில் கைத்தறிகளில் 30 ஆயிரம் சேலைகளும், பெடல் தறிகளில் 1.30 லட்சம் சேலைகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சேலைகள் உற்பத்தி செய்வதற்கு தேவையான நுால், அதற்கான கூலி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் அரசு மூலம் வழங்கப்படுகிறது. கொள்முதல் செய்த சேலைகளுக்கான பாக்கி தொகை கடந்த 3 ஆண்டுகளில் ரூ. ஒரு கோடிக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் சேலைகளுக்கான பேக்கிங், போக்குவரத்து, பணியாளர்கள் சம்பளம், கட்டட வாடகை, வட்டி ஆகிய செலவுகளுக்கு பணம் இன்றி கூட்டுறவு சங்கங்கள் திணறுகின்றன.
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு தனி நபர் மூலம் கடன் பெற்று செலவுகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. நிலுவைத் தொகை கிடைத்தால் மட்டுமே சங்கங்கள் தொடர்ந்து செயல்பட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.