ADDED : பிப் 03, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டியில் தனியார் அமைப்பு சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடந்தது. இதற்காக போடி விலக்கில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொது மக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது டூவீலர்களை எடுக்கும் போது இடித்துக் கொண்டதால் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கண்காணித்து விரட்டினர்.
நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் பலர் டூவீலர்களில் 3 பேர், அதற்கு மேல் பயணித்து வந்தனர்.

