/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுவனுக்கு தொந்தரவு வாலிபருக்கு சிறை
/
சிறுவனுக்கு தொந்தரவு வாலிபருக்கு சிறை
ADDED : பிப் 01, 2024 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சாமாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 19. கடந்த 2019ம் ஆண்டு செப்., 20ல் அதே பகுதியில் உள்ள குளத்தில் ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த, 15 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்தார்.
கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து விஜயை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி கணேசன், குற்றவாளி விஜய்க்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 21,000 ரூபாய் அபராதம் விதித்தார்.