/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்புரை ஆப்பரேஷன் செய்து 2 மணி நேரத்தில் ‛'டிஸ்சார்ஜ்' தேனி மருத்துவக் கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
/
கண்புரை ஆப்பரேஷன் செய்து 2 மணி நேரத்தில் ‛'டிஸ்சார்ஜ்' தேனி மருத்துவக் கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
கண்புரை ஆப்பரேஷன் செய்து 2 மணி நேரத்தில் ‛'டிஸ்சார்ஜ்' தேனி மருத்துவக் கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
கண்புரை ஆப்பரேஷன் செய்து 2 மணி நேரத்தில் ‛'டிஸ்சார்ஜ்' தேனி மருத்துவக் கல்லுாரி கண் சிகிச்சைத்துறை தலைவர் தகவல்
ADDED : டிச 20, 2024 03:35 AM

தேனி: கண்புரை பாதிப்பிற்கான 'கேட்ராக்ட்' அறுவை சிகிச்சை முடிந்ததும் 2 மணி நேரத்தில் 'டிஸ்சார்ஜ்' ஆகி செல்லலாம். இதனை பொது மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.' என, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண் சிகிச்சை நலத்துறை தலைவர் டாக்டர் கணபதிராஜேஷ் தெரிவித்தார்.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கண் சிகிச்சைத்துறை இயங்குகிறது.இதில் 5 டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள் என 12 பேர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். 30 படுக்கைகள் உள்ளன.
இத்துறையில் மாதந்தோறும் 160 கண்புரை ஆப்பரேஷன் வீதம் ஆண்டிற்கு 1920 ஆப்பரேஷன்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 3500க்கும் மேற்பட்ட ஆப்பரேஷன்கள் செய்து கண்புரை பாதிப்பில் இருந்து பலரை குணப்படுத்தி உள்ளனர். துறையின் தலைவரும்,கண் மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் கணபதிராஜேஷ், தினமலர் நாளிதழின்,அன்புடன் அதிகாரி'பகுதிக்காக பேசியதாவது:
'கண்புரை' பாதிப்பு என்றால் என்ன
சிலர் கண்புரை ஒரு நோய் என்கின்றனர். அது தவறு.கண்புரை ஒரு நோய் அல்ல. அது 40 வயதிற்கு மேல் வயது ஆக. ஆக ஏற்படக்கூடிய ஒரு வகை கண்ணில் ஏற்படக்கூடிய பாதிப்பாகும். கண்ணில் உள்ளலென்ஸை மேகமூட்டம் போன்று மறைக்கும் பகுதியைத்தான் கண்புரை என்கிறோம்.இப்பாதிப்பு ஏற்பட்டால் பார்வை மங்கி அன்றாட செயல்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்தும். காலப்போக்கில் பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
யாருக்கெல்லாம் கண்புரை ஏற்படும் அபாயம் அதிகம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், அதிகமாக மது குடிப்பவர்கள், பரம்பரையாக கண்புரை நோய் தொடர்ச்சி உள்ளவர்கள், வெயிலில் அதிக நேரம் அலைந்து பணிபுரிபவர்கள், ஆர்த்ரைட்டிஸ் அலர்ஜி போன்ற உடல்நல பிரச்னைகளுக்கு ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்கள் கண்புரை ஏற்படும்.
கண்புரை அறிகுறிகள் என்ன
கண்புரை லேசாக இருக்கும் போது எந்த அறிகுறியும் தெரியாது. வளர, வளர பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும். பார்வை மங்கலாகவோ அல்லது மேகமூட்டமாகவோ எப்போதும் தெரியும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும். பார்வையின் நிறங்கள் மங்கித் தெரிய ஆரம்பிக்கும்.இரவில் தெளிவாக பார்க்க முடியாது. விளக்குகள், சூரிய ஒளி, வாகன முகப்பு விளக்குகள் மிகவும் பிரகாசமாக தெரியும். இரட்டை பிம்பங்களாக பார்வை தெரிய ஆரம்பிக்கும். இவைதான் அறிகுறிகளாகும்.
கண்புரை பாதிப்பில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி
சூரிய ஒளியில் செல்லும்போது சன்கிளாஸ், தொப்பி அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.காயம் படாமல் இருக்க வெல்டிங் டிரில்லிங் போன்ற 'பவர் டூல்'களை பயன்படுத்தும் போதும், விளையாடும் போதும் கண்களை பாதுகாக்கும் கண்ணாடி அணிவது அவசியம். புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை தேவையான அளவில், முறையான நேரத்தில்எடுத்து கொண்டால், பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இக்குறைபாட்டிற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா
படிப்பது, வாகனம் ஓட்டுவது, அல்லது டி.வி., பார்ப்பது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் உங்கள் கண்புரை குறுக்கீடு செய்தால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்போம். பழுதான கண் லென்ஸை அகற்றவிட்டு அதற்கு பதிலாக புதிய செயற்கை லென்ஸை மாற்றுவோம்.இந்த லென்ஸ்கள் சில ஆயிரங்களில் துவங்கி சில லட்சங்கள் மதிப்பு உள்ளவையாக உள்ளன.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை வசதி உள்ளதா
இத்திட்டத்தில் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அதிகளவில் கண்புரை பாதிப்பை குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்து வருகிறோம். இதுவே வெளியில் சென்றால் அதிக செலவு ஆகும். அதனை குறைக்க பாதிப்புள்ள அனைவரும் தேனிஅரசு மருத்துவக்கல்லுாரி கண் சிகிச்சைத்துறையை அணுகலாம்.
அதிநவீன அறுவை சிகிச்சை முறைகள் குறித்து.