/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஹெட் ஒர்க்ஸ்' அணை பராமரிப்பு இன்றி தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
/
'ஹெட் ஒர்க்ஸ்' அணை பராமரிப்பு இன்றி தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
'ஹெட் ஒர்க்ஸ்' அணை பராமரிப்பு இன்றி தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
'ஹெட் ஒர்க்ஸ்' அணை பராமரிப்பு இன்றி தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
ADDED : டிச 31, 2024 06:41 AM

மூணாறு: பள்ளிவாசல் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு முக்கிய நீர் ஆதாரமான ' ஹெட் ஒர்க்ஸ்' அணை பராமரிப்பு இன்றி தண்ணீர் வீணாகி வருகிறது.
மூணாறு அருகே பள்ளிவாசல் நீர் மின் நிலையம் கேரளாவில் முதல் நீர் மின் நிலையமாகும்.அங்கு 375 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. மேலும் 60 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
முக்கிய நீர் ஆதாரம்: அங்கு மின் உற்பத்திக்கு பழைய மூணாறில் உள்ள ' ஹெட் ஒர்க்ஸ்' அணை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
அங்கிருந்து சுரங்கம், ராட்சத குழாய் ஆகியவற்றின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது. அடுத்து அதிகரிக்கப்படும் மின் உற்பத்திக்கு அணையில் இருந்து அமைக்கப்பட்ட சுரங்கத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பராமரிப்பு இல்லை: மின் உற்பத்திக்கு ' ஹெட் ஒர்க்ஸ்' அணை முக்கிய நீர் ஆதாரம் என்றபோதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அணையில் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை.
அணையில் நீர் தேக்க பகுதிகளில் பெரும் அளவில் நாணல் புல் வளர்ந்துள்ளதாலும், மண், சேறு தூர்வாரப்படாததாலும் தண்ணீரை சேமிக்க இயலாமல் வீணாகி வருகிறது. அதனால் மின் உற்பத்தியை அதிகரிக்கும் போது நீர் இருப்பு இன்றி உற்பத்தி பாதிக்க வாய்ப்புள்ளது. தவிர கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அணைக்கட்டின் அருகே பாதுகாப்பு சுவர் சேதமடைந்தது. அதனை இதுவரை சீரமைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.