/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் மோட்டார் இல்லாததால் சுகாதார வளாகம் மூடல் அடிப்படை வசதிக்கு அல்லாடும் தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள்
/
மின் மோட்டார் இல்லாததால் சுகாதார வளாகம் மூடல் அடிப்படை வசதிக்கு அல்லாடும் தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள்
மின் மோட்டார் இல்லாததால் சுகாதார வளாகம் மூடல் அடிப்படை வசதிக்கு அல்லாடும் தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள்
மின் மோட்டார் இல்லாததால் சுகாதார வளாகம் மூடல் அடிப்படை வசதிக்கு அல்லாடும் தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள்
ADDED : ஜூலை 08, 2025 01:58 AM

தேவாரம்: உத்தமபாளையம் ஒன்றியம், தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்காபுரத்தில் மின் மோட்டார் இல்லாததால் சுகாதார வளாகம் பயன் இன்றி மூடியதால் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்காபுரத்தில் நடுத்தெரு, கிழக்கு, மேற்கு தெரு, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சொக்கலிங்காபுரம் நடுத்தெருவில் ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளன. பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து முட்புதர்களால் சூழ்ந்து உள்ளன.
ஊராட்சி அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் சேதமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது.
ரோடு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
சுகாதார வளாகத்தில் குப்பை
வேலுக்குமார், சொக்கலிங்காபுரம்: தெற்கு தெருவில் சிமென்ட் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. 15வது நிதிக்குழு திட்டத்தின் ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளன. 2 ஆண்டுகள் ஆகியும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணி துவங்காமல் கிடப்பில் உள்ளன. நடுத்தெருவில் பாதிதூரம் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள பகுதியில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. மக்கள் நடந்தும், டூவீலரில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சில தெருக்களில் மின் கம்பம் சேதம் அடைந்து உள்ளன.
மாரியம்மன் கோயில் தெருவில் சுகாதார வளாகம் தண்ணீர் வசதி இருந்தும் போர்வெல் மின் மோட்டார் இல்லாததால் பயன்பாடு இன்றி குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது.
அருகே வசிப்போர் சுகாதாரகேட்டால் பாதிக்கின்றனர். கிடப்பில் உள்ள ரோடு பணியை துவங்கிடவும், சுகாதார வளாகத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பையை எரிப்பதால் சுகாதார கேடு
நாகராஜ், சொக்கலிங்காபுரம்: இப்பகுதியில் சாக்கடை சுத்தம் செய்வது இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. இதனால் கொசுத் தொல்லையாலும், சுகாதார கேட்டிலும் மக்கள் பாதிப்பு அடைகின்றனர். தெருக்களில் குப்பை அகற்றாமல் தீ வைப்பதால் வெளிவரும் புகையால் பாதிக்கின்றனர்.
கிழக்கு தெருவில் போர்வெல் தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. இது வாகன போக்குவதற்கு இடையூறாக உள்ளது. சாக்கடை சேதமடைந்து உள்ளதால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பைப் லைன் அமைத்தும் வினியோகம் இன்றி உள்ளது.
எரியாத தெரு விளக்குகள்
தென்னரசு, சொக்கலிங்காபுரம்: ஆதிதிராவிடர் காலனியில் ரோட்டில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன.
சாக்கடை தூர் வாரிய நிலையில் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளை வீட்டின் அருகே கொட்டி வருகின்றனர். பல நாட்களாகியும் அகற்றப்படாததால் புழுக்கள் தாராளமாக உலா வருவதோடு, வீடுகளுக்குள் புகும் நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். தெருக்களின் மின்கம்பம் இருந்தும் விளக்கு எரியாதால் இரவில் இருளில் மூழ்கி உள்ளன. ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.