/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சி பகுதியில் காட்சி பொருளாகும் சுகாதார வளாகங்கள்
/
தேனி நகராட்சி பகுதியில் காட்சி பொருளாகும் சுகாதார வளாகங்கள்
தேனி நகராட்சி பகுதியில் காட்சி பொருளாகும் சுகாதார வளாகங்கள்
தேனி நகராட்சி பகுதியில் காட்சி பொருளாகும் சுகாதார வளாகங்கள்
ADDED : நவ 14, 2024 07:01 AM

தேனி; தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளன.
தேனி நகராட்சிக்குட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல வார்டுகளில் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், மின்மோட்டர் பழுது, போதிய பராமரிப்பு இல்லாதது, மின்வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 13வது வார்டு வள்ளி நகர், 33 வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டி, வாசுகி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் 7 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி பொருளாக உள்ளன. பல சுகாதார வளாகங்கள் இன்று வரை பயன்பாடு இன்றி உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினாலும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் சூழலும், சுகாதார பாதிப்புகளால் நோய் வாய்ப்படும் நிலையும் உருவாகிறது. நகராட்சி அதிகாரிகள் பயன்பாடில்லாத சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது பற்றி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், 'பயன்பாடில்லாத சுகாதார வளாகங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கக்கன்ஜி நகர், 5 வார்டில் உள்ள சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பயன்பாட்டில்லாத சுகாதார வளாகங்கள் பற்றி தகவல் தெரிவித்தால் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

