/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருப்பதி சென்று திரும்பும் பக்தர்களைகண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவு ஆந்திராவில் கொரோனா பரவல் எதிரொலி

ADDED : மே 24, 2025 02:29 AM
தேனி:ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் வகை வைரஸ் உட்பிரிவுகளான ஜெ.என்.1 மற்றும் எல்.இ.சி., ஆகிய இரு கொரோனா தொற்றுகள் காணப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களை சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கொரோனா 2019 இறுதி முதல் 2023 துவக்கம் வரை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது தொற்று இருந்தாலும் தீவிர பாதிப்பு இல்லை. கேரளாவில் அதிகபட்சமாக 95 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒருவர் இறந்துள்ளார். தமிழகத்தில் 65 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆந்திராவில் அதிகரிப்பு எதிரொலி :
ஆந்திராவில் எல்.இ.சி., கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ‛முகக்கவசம் அணிவது கட்டாயம், அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத்தலங்கள், சமுதாய கூடங்கள், பண்டிகை விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் வழிகாட்டுதல்படி பங்கேற்கவும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் என 8 வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பதிக்கு தமிழகம் மட்டும் இன்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எனவே திருப்பதி சென்று திரும்பும் பக்தர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவர்களின் வயது, பாலினம், இணை நோய்களால் பாதிக்கப்பட்டு மாத்திரை மருந்துகள் எடுப்பவரா, வேறு பாதிப்புகளுக்கு மருந்து உட்கொள்பவரா, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரா என்ற விபரங்களை வட்டார மருத்துவ களப்பணியாளர்கள் பட்டியல் தயாரித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.