ADDED : ஜூலை 10, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியில் சாலைப்பிள்ளையார் கோயில் எதிரே அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளிக்கு வடக்கு பகுதியில் பள்ளி ஓடைத்தெரு அமைந்துள்ளது. இத் தெருவில் பள்ளி சுவர் அருகே உள்ள சாக்கடை சேதமடைந்துள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் அருகே சாக்கடை தேங்குகிறது. சாக்கடை துர்நாற்றம் வீசுவதால் வகுப்பறையில் ஜன்னல், கதவை மூடி பாடம் நடத்தும் நிலை உள்ளது.
இந்த தெருவில் தற்போது நகராட்சி சார்பில் புதிய ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ரோடு அமைக்கும் பணியுடன் சாக்கடையையும் புதிதாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

