/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் இறந்த சுகாதார ஆய்வாளர் உடல் உறுப்புக்கள் தானம் ஆர். டி. ஒ., அரசு மரியாதை செலுத்தினார்

ADDED : நவ 24, 2024 07:14 AM
உத்தமபாளையம் : கம்பம் புதுப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் வாசன் மகன் சூரியகுமார் 40, திருமணமானவர். இவர் ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றினார்.
நவ.. 20 ல் தேனியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்த போது, சின்னமனூர் பைபாஸ் ரோட்டில் மார்க்கையன் கோட்டை பிரிவில் இவரது டூ வீலருக்கு பின்னாள் வந்த டிப்பர் லாரி மோதியதில் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி காயமடைந்தார். போலீசார் அவரை மீட்டு சின்னமனூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது. க.புதுப்பட்டியில் நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. உத்தமபாளையம் ஆர். டி.ஒ. தாட்சாயினி அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.