ADDED : மே 28, 2025 07:16 AM

கம்பம், : இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை, பலத்த காற்று வீசுவதால் நெடுங்கண்டம் பகுதியில் நூற்றுக்கணக்கில் மரங்கள் விழுந்து ஏலச் செடிகள் சேதமடைந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மாலி, சாஸ்தா நடை, வண்டன் மேடு, சங்குண்டான், புளியன் மலை, வாழ வீடு, மேப்பாறை, மாதவன் கானல், ஆமையாறு, அந்நியார் தொழு, நெடுங்கண்டம், பூப்பாறை, பாரத்தோடு, வெங்கலப்பாறை, நரியம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் பறிப்பு ஆகஸ்ட்டில் துவங்கும்.
இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே துவங்கியதால் இடுக்கி மாவட்டத்தில் காற்றும் மழையும் அதிகமாக உள்ளது.
நேற்று பெய்த மழை, காற்று காரணமாக நெடுங்கண்டம், பாரத்தோடு, சுல்தானியா, கல்தொட்டி, வாழ வீடு, அய்யர் பாறை , மயிலாடும்பாறை, வண்டிப் பெரியாறு, மாலி உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து ஏலச் செடிகள் சேதமாகின.
மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.