/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் கனமழை; நீர்மட்டம் 2 நாட்களில் ஒரு அடி உயர்வு
/
பெரியாறு அணையில் கனமழை; நீர்மட்டம் 2 நாட்களில் ஒரு அடி உயர்வு
பெரியாறு அணையில் கனமழை; நீர்மட்டம் 2 நாட்களில் ஒரு அடி உயர்வு
பெரியாறு அணையில் கனமழை; நீர்மட்டம் 2 நாட்களில் ஒரு அடி உயர்வு
ADDED : மே 27, 2025 04:16 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1648 கன அடியாக அதிகரித்தது. இரண்டு நாட்களில் ஒரு அடி உயர்ந்து 115.65 அடியை எட்டியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில்மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 36.2 மி.மீ., பெரியாறில் 55.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு 584 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 1648 கன அடியாக இருந்தது. தொடர் மழையால் கடந்த இரண்டு நாட்களில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 115.65 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).
தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1844 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக குமுளி மெயின் ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு டூவீலர்கள், கார்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.