/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஹலோ... ஹலோ'... சிக்னல் கிடைக்காமல் அவதி கோம்பை தொழுவில் சில கி.மீ. துாரம் சென்று அலைபேசியில் பேசும் நிலை
/
'ஹலோ... ஹலோ'... சிக்னல் கிடைக்காமல் அவதி கோம்பை தொழுவில் சில கி.மீ. துாரம் சென்று அலைபேசியில் பேசும் நிலை
'ஹலோ... ஹலோ'... சிக்னல் கிடைக்காமல் அவதி கோம்பை தொழுவில் சில கி.மீ. துாரம் சென்று அலைபேசியில் பேசும் நிலை
'ஹலோ... ஹலோ'... சிக்னல் கிடைக்காமல் அவதி கோம்பை தொழுவில் சில கி.மீ. துாரம் சென்று அலைபேசியில் பேசும் நிலை
ADDED : ஆக 05, 2025 06:50 AM

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம், மேகமலை ஊராட்சி, கோம்பை தொழுவில் அலைபேசி டவர் இல்லாததால் சில சில கி.மீ., துாரம் சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு சென்று பேசும் அவல நிலை நீடிக்கிறது.
மேற்குதொடர்ச்சி மலையை சார்ந்துள்ள இந்த ஊராட்சியில் மேகமலை, கோம்பைத்தொழு, வலம்புரி, முத்துலாபுரம், அண்ணாநகர், போசுந்தராபுரம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு கிராமமும் சில கி.மீ., தூரத்தில் உள்ளன. இப் பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லை. விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில்களை தவிர்த்து மாற்று தொழிலுக்கு வழிவகை இல்லை.
தகவல் தொடர்புகளுக்கும் போதிய வசதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் சொந்த வாகனத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.
மேகமலை ஊராட்சிக்குட்பட்ட கோம்பைத் தொழு கிராமத்தின் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டி ரமேஷ், கோம்பைத்தொழு: கிராமத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உடைந்து பல மாதங்கள் ஆகிறது. புதிய மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை.
குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சமுதாயக்கூடம் இல்லாததால் நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள கழிப்பறை பயன்பாடின்றி மூடியுள்ளது.
அலைபேசிக்கு டவர் வசதி இப்பகுதி கிராமங்களில் செய்து தரவில்லை. இதனால் தகவல் தொடர்புக்கு மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். அலைபேசி வைத்திருப்பவர்கள் அவசரத்திற்கு பேச வேண்டுமானால் சில கி.மீ., தூரம் சென்று, சிக்னல் கிடைக்கும் இடத்திலிருந்து தொடர்பு கொள்ள வேண்டும்.
பி.எஸ்.என்.எல்., அல்லது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்பகுதியில் டவர் அமைத்து தகவல் தொடர்பு வசதிகளை கொடுக்க வேண்டும்.
அடிக்கடி மின் துண்டிப்பு செல்வகுமார்: கோம்பைத்தொழு: இக் கிராமத்தை கடந்துதான் சுற்றுலா இடமான சின்னச் சுருளி அருவிக்கு செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை ஆங்காங்கே விட்டு செல்வதால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிப்படைகிறது.
அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தினமும் இப்பகுதியில் சில மணி நேரங்கள் மட்டுமே மின் விநியோகம் உள்ளது. மலைப்பகுதி வழியாக செல்லும் மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை மின் வாரியத்தினர் சரி செய்வதில் தாமதமாகிறது. மின் வாரியத்தில் இப் பகுதிக்கு போதிய பணியாளர்களும் நியமனம் இல்லை.
பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டி உள்ளது.
சுடுகாடு கூரை சேதம் அடைந்து பல ஆண்டுகளாக சரி செய்யப்படவில்லை. இங்கு தண்ணீர், தெரு விளக்கு வசதியும் இல்லை. கிராமத்தில் தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இரவில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
கோம்பைத்தொழுவிலிருந்து சின்னச்சுருளி வரை பல வளைவுகளை கொண்ட ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படு கிறது.
விபத்தை தவிர்ப்பதற்கு ரோடுகளில் தேவையான முன்னேற்பாடுகள், எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்.