ADDED : ஜன 31, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தேனி டிராபிக் போலீசார் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்.பி., சிவபிரசாத் கொடி அசைத்து துவக்கி வைத்து, டூவீலரில் ஹெல்மெட் அணிந்துஊர்வலத்தில் சென்றார். கூடுதல் எஸ்.பி., கேல்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, டிராபிக் இன்ஸ்பெக்டர்சஜூக்குமார், தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர், டிராபிக் எஸ்.ஐ., கருப்பசாமி முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் துவங்கி அரண்மனைப்புதுார் விலக்கு ரயில்வே கேட், , அல்லிநகரம் வழியாக அன்னஞ்சியில் நிறைவு பெற்றது. டிராபிக் போலீசார் உட்பட ஏராளமானோர் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து, விழிப்புணர்வுவாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

