/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடமலைகுடி ஊராட்சி அலுவலத்தை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
/
இடமலைகுடி ஊராட்சி அலுவலத்தை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
இடமலைகுடி ஊராட்சி அலுவலத்தை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
இடமலைகுடி ஊராட்சி அலுவலத்தை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்
ADDED : பிப் 04, 2024 05:51 AM

மூணாறு 'மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சி அலுவலகத்தை இரண்டாவது முறையாக காட்டு யானைகள் சேதப்படுத்தின.
மூணாறு அருகே இடமலைகுடியில் 24 கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு என தனி ஊராட்சியாக 2010ல் உருவாக்கப்பட்டு இடமலைகுடி ஊராட்சி என செயல்படுகிறது.
அங்குள்ள சொசைட்டிகுடியில் ஊராட்சி அலுவலம், அரசு பள்ளி உள்பட அரசு சார்பிலான பல்வேறு கட்டடங்கள் உள்ளன.
அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஊராட்சி அலுவலகத்தின் ஜன்னல், கதவு ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு உள்ளே நுழைந்து மேஜை, நாற்காலி உள்பட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தின.
ஊராட்சி அலுவலகத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
இறுதியாக ஜன.15ல் அலுலகத்தை யானைகள் சேதப்படுத்திய நிலையில் இரண்டு வார இடைவெளியில் மீண்டும் சேதப்படுத்தப்பட்டது.
இடமலைகுடி ஊராட்சி உருவாக்கப்பட்ட பிறகு அலுவலகம் தேவிகுளத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை சொசைட்டிகுடிக்கு முழுமையாக மாற்றும் பணிகள் நடந்து வரும் நிலையில் காட்டு யானைகள் அலுவலகத்தை சேதப்படுத்தி வருகிறது.
அதனால் அலுவலகத்தை சுற்றி அகழி வெட்ட வேண்டும் என கோரிக்கையை வனத்துறையினர் நிராகரித்து வருவதால் மலைவாழ் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.