/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரையில் ரூ.2.27 கோடியில் ஹைடெக் கோஆப்டெக்ஸ் ஷோரூம் மண்டல துணை மேலாளர் தகவல்
/
மதுரையில் ரூ.2.27 கோடியில் ஹைடெக் கோஆப்டெக்ஸ் ஷோரூம் மண்டல துணை மேலாளர் தகவல்
மதுரையில் ரூ.2.27 கோடியில் ஹைடெக் கோஆப்டெக்ஸ் ஷோரூம் மண்டல துணை மேலாளர் தகவல்
மதுரையில் ரூ.2.27 கோடியில் ஹைடெக் கோஆப்டெக்ஸ் ஷோரூம் மண்டல துணை மேலாளர் தகவல்
ADDED : செப் 26, 2025 10:57 PM
தேனி:''மதுரையில் அக்.4ல் ரூ.2.27 கோடியில் கைத்தறி ஹைடெக் கோஆப்டெக்ஸ் ஷோரூம் திறக்கப்பட உள்ளது''என கோ-ஆப்டெக்ஸ் மண்டல துணை மேலாளர் தீபா தெரிவித்தார்.
தேனியில் கோஆப்டெக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மதுரை பழங்காநத்தம் அழகப்பன்நகரில் கோஆப்டெக்ஸ் மண்டல அலுவலக கீழ் தளத்தில் நவீன உயர்ரக ஹைடெக் வசதி செய்யப்பட்டுள்ளன. இங்கு கோஆப் டெக்ஸ் ஆடைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் வசதி, விற்பனையை அதிகரிக்கும் வகையில் டிசைனர் ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது.
இங்கு கைத்தறி மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்துவகை சேலைகள், ஆடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு, அக்.4ல் திறக்கப்பட உள்ளது.
கோஆப் டெக்ஸ்சில் கிடைக்கும் அனைத்து வகை ஆடைகளும்கிடைக்கும்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார், புதுக்குடி, கிளாக்குளம், வெள்ளாங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான புவிசார் குறியீடு பெற்ற சேலைகள் விற்பனைக்கு அனைத்து கோஆப்டெக்ஸ் விற்பனையகங்களிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சேலைகள் ஒரு செடியில் இலைகள் இருப்பது போல் பட்டு, பருத்தி நுாலால் நெசவுசெய்யப்படுபவை. இதன் தனிச்சிறப்பு இதனை அணியும் பெண்களுக்கு கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் இதமாகவும் உணர முடியும்.இதன் விலை ரூ.1200 முதல் வண்ணம், டிசைன் வகைகளுக்கு ஏற்ப விற்பனைக்கு வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.