/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி மரிமூர் களம் ஆக்கிரமிப்பை உயர் நீதிமன்ற உத்தரவில் அகற்றம்
/
போடி மரிமூர் களம் ஆக்கிரமிப்பை உயர் நீதிமன்ற உத்தரவில் அகற்றம்
போடி மரிமூர் களம் ஆக்கிரமிப்பை உயர் நீதிமன்ற உத்தரவில் அகற்றம்
போடி மரிமூர் களம் ஆக்கிரமிப்பை உயர் நீதிமன்ற உத்தரவில் அகற்றம்
ADDED : டிச 20, 2025 06:11 AM

போடி:போடி அருகே விவசாயிகள் பயன்படுத்தும் மரிமூர் களத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினர் நேற்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மொசப்பாறை, முத்துக்கோம்பை, மல்லிங்கர்சாமி கரடு. இப்பகுதியை சேர்ந்த 600 மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் மரிமூர் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் தென்னை, மா, இலவம், கரும்பு உட்பட 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் விளை பொருட்களை போடி புதூர் அருகே உள்ள மரிமூர் களம் பகுதிக்கு கொண்டு வருவது வழக்கம்.
2 ஏக்கர் 22 சென்ட் அளவுள்ள மரிமூர் களம் பகுதியை தனிநபர் ஆக்கிரமித்து தென்னை, மா, இலவம் என விவசாயம் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் விளை பொருட்களை களத்திற்கு கொண்டு வர சிரமம் அடைந்தனர். களத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற போடி ஒன்றிய நிர்வாகத்திடம் விவசாயிகள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற மரிமூர் கண்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மரிமூர் களம் ஆக்கிரமிப்பு அகற்ற போடி ஒன்றிய பி.டி.ஓ., வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.
இதனை ஒட்டி நேற்று போடி தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் ஆர்.ஐ., விஜயகுமார். வி.ஏ.ஓ., விஜயலட்சுமி, போடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாபர் சித்திக் முன்னிலையில் களத்தில் ஆக்கிரமித்து இருந்த மா, இலவம், வேம்பு உள்ளிட்ட மரங்களை போலீஸ் பாதுகாப்புடன் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

