/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்திற்கு இடையூறாக ஹைமாஸ் விளக்கு
/
போக்குவரத்திற்கு இடையூறாக ஹைமாஸ் விளக்கு
ADDED : ஜன 16, 2026 05:54 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்கு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அதனை மாற்றி அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையுடன் ஏத்தக்கோவில் ரோடு இணையும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. ஆண்டிபட்டியில் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடி அதிகம் இல்லை. தற்போது பஸ் ஸ்டாண்ட் எதிரே ஏத்தகோவில் ரோட்டில் உள்ள ஹைமாஸ் விளக்கு, அதன் சுற்றுச்சுவர் அமைந்துள்ள இடம் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. ஹைமாஸ் விளக்கை ஒட்டி 20 அடி தூரம் வரை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஜி.கே.பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கூறியதாவது: ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஹைமாஸ் விளக்கை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

