sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

/

 இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

 இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

 இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 16, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 16, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் வழங்கியவர்கள் இழப்பீடு தொகை பெற ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தேனி நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது, திண்டுக்கல் குமுளி வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க 2012ல் அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் நில எடுப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சிலர் குடும்ப உறுப்பினர்கள் இடையே பாக பிரிவினையால் நில இழப்பீடு வழங்க முடியாத சூழல் உள்ளது. சில நில உரிமையாளர்கள் எங்கு வசிக்கிறார்கள் என கண்டறியப்படாமல் உள்ளது. இந்நிலையில் வழங்கப்படாத இழப்பீட்டு தொகையை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய சிறப்பு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தி உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பித்து இழப்பீடு தொகை பெறலாம். என்றார்.






      Dinamalar
      Follow us