/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பிரசவ கால மகளிர் குழந்தைகள் இறப்பு அதிகம் ; அமைச்சர் சுப்பிரமணியம் பேச்சு

ADDED : செப் 03, 2025 09:21 AM
கம்பம்; ' தேனி மாவட்டத்தில் பிரசவ கால மகளிர், குழந்தைகள் இறப்பு அதிகமாக உள்ளது,' என அமைச்சர் சுப்ரமணியம் பேசினார்.
வளரிளம் பெண்கள் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேகமலை, மணலாறு நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது :
தமிழகத்தில் வளரினம் பெண்கள் திருமணம் அதிகம் நடைபெறும் 24 வட்டாரங்கள் கண்டறிந்து அங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது. இதில் தேனி மாவட்டத்தில் ஆறு வட்டாரங்கள் உள்ளன. வளரிளம் பெண்கள் திருமணத்தால் பெண், குழந்தை உடல் நலம் பாதிக்கப்படும். இவர்களை சட்டத்தினால் தண்டிப்பதோடு விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்படுகிறது.
பிரசவ கால மகளிர் இறப்பு ஒரு லட்சம் பேருக்கு 2021 -22 ல் 90.5 சதவீதமாக இருந்ததை 2022 -- 23 ல் 48 ஆகவும், 2023 -- 24 ல் 45 , கடந்தாண்டு 39 சதவீதமாக குறைந்துள்ளோம். தேனியில் 43.3 சதவீதம் உள்ளது. பிரசவ கால குழந்தை இறப்பில் 2021 -- 22 ல் 10.4 சதவீதமாக இருந்தது. 2022 -23 ல் 10 ஆகவும், 2023- -24 ல் 8.2, 2024 -- 25 ல் 7.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் தேனியில் 9.4 சதவீதமாக உள்ளது. தமிழக சராசரியை காட்டிலும் தேனியில் பிரசவ கால பெண் இறப்பு, குழந்தை இறப்பு அதிகம் உள்ளது என பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ் ஜீத் சிங், எம்.பி. தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் இராமகிருஷ்ணன், மகாராசன் சரவணக்குமார் உள்ளிடடோர் பங்கேற்றனர்.