UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:32 PM
தேனி: தேனியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடுகளில் டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், கண்களை கூசும் பல்புகள், பதிவெண் பலகை இல்லாமல் சில இளைஞர்கள் டூவீலர் ரேசில் ஈடுபடுகின்றனர்.
இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரவீன் கவுதம் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரவில் டூவீலர் சோதனையை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் பூதிப்புரம், நேரு சிலை பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணமூர்த்தி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய டூவீலரில் சென்ற இரு வாலிபர்களை பிடித்தனர்.
அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் டூவீலரில் இருந்த கண்களை கூசும் வகையில் பொருத்திய இருந்த விளக்குகள், அதிக ஒலி எழுப்பிய சைலன்சர் ஆகியவற்றை டூவீலரில் இருந்து அகற்றினர்.
