UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி மோதிலால் தெரு தினேஷ்வரன் 40, பால் வியாபாரி.
கோயில் காடு பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் 5 பசு மாடுகள் வளர்கிறார். தோட்டத்தில் இருந்த ஒரு பசு திருடு போனது. இவரது புகாரில் தென்கரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அழகர்சாமிபுரம் சூர்யா 28. அவரது நண்பர் சிபிராஜ் 26 பசுவை திருடியது தெரிந்தது. போலீசார் சிபிராஜை கைது செய்து பசுவை மீட்டனர். சூர்யாவை தேடி வருகின்றனர்.
