/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பைபாஸ் சந்திப்புக்களில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால் அவதி விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு

ADDED : அக் 06, 2024 03:30 AM
கம்பம் : மாவட்டத்தில் பைபாஸ் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சரிவர எரியாததால் இரவில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183ன் கீழ் கொண்டுவரப்பட்டு, இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தேனியில் இருந்து குமுளி வரை தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. -
ஒவ்வொரு பைபாஸ் ரோட்டிலும் துவங்குமிடம் மற்றும் முடியும் இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து எளிதாக நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது.
பைபாஸ் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சமீபகாலமாக சரிவர எரிவதில்லை. உத்தமபாளையம் பைபாஸ் துவங்கும் இடம், கம்பம் பைபாஸ் முடியும் இடம், சின்னமனூர் பைபாஸ் துவங்கும் இடம் உள்ளிட்ட பல சந்திப்புகளில் உயர்கோபுர மின்விளக்குகள் தொடர்ந்து எரியாமல் பழுதடைந்துள்ளது.
விளக்குகள் எரியும் போதே விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிலும் மூன்று திசைகளில் இருந்தும் வாகனங்கள் வரும் பைபாஸ் சந்திப்புக்களில் விளக்குகள் எரியாத நிலையில் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் சரியான போக்குவரத்து சிக்னல்கள் இல்லாததால் குழம்புகின்றனர். இந்நிலையில்.
பைபாஸ் சந்திப்புகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பைபாஸ் சந்திப்புக்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொடந்து உயர்கோபுர மின்விளக்குகள் இரவில் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.