/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நிகழ்ச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நிகழ்ச்சி
ADDED : ஜன 30, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசுப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு உயர்கல்வி உங்கள் இலக்கு' என்ற தலைப்பில் கருதரங்கம், கண்காட்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.பிப்ரவரி முதல்வாரத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கலாம். கருத்தரங்கில் கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள், முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்வார்கள். கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.

