/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பைபாஸ் ரோடுகளில் கேமரா பொருத்த நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தல்
/
பைபாஸ் ரோடுகளில் கேமரா பொருத்த நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தல்
பைபாஸ் ரோடுகளில் கேமரா பொருத்த நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தல்
பைபாஸ் ரோடுகளில் கேமரா பொருத்த நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2025 06:48 AM
கம்பம்: பைபாஸ் ரோடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வர கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் முதல் கொட்டாரக்கரா (கேரளா) வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183 ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் நான்கு வழிச்சாலை என திட்டமிடப்பட்டு பின் இரு வழி சாலையாக மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் நான்குவழிச்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி சாலைகள் மேம்படுத்தப்பட்ட பின்பு, திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது.
இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணம் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தற்போது முதற்கட்டமாக பைபாஸ் ரோடுகளில் மட்டுமாவது சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வாகனங்களின் வேகம் கண்காணித்து அபராதம் விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.
இந்த கேமராக்களை போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து துறைகளுடன் இணைக்க வேண்டும்.

