/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை மவுனம்
/
கம்பம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை மவுனம்
கம்பம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை மவுனம்
கம்பம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை மவுனம்
ADDED : பிப் 18, 2024 01:34 AM
கம்பம்: கம்பம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறை மவுனம் காத்து வருகிறது.
கம்பம் நகராட்சி இருமாநில இணைப்பு நகரமாக உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தினமும் கம்பம் வருகின்றனர். எனவே கம்பம் நகர் மெயின்ரோடு, கம்பமெட்டு ரோடு, வேலப்பர் - கோயில் வீதி, காந்திஜி வீதி, பார்க் ரோடு, பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு உள்ளிட்ட பல வீதிகள் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.
இதனால் கடைக்காரர்கள், வர்த்தக நிறுவனங்கள், ஒட்டல்கள், நகை கடைகள் தங்களின் விளம்பரம் பலகைகளை ரோட்டிற்கே கொண்டு வந்து வைக்கின்றனர். ரோட்டை ஆக்கிரமித்து கடை படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இதனால் மெயின்ரோடு நெருக்கடியில் சிக்கி உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை குறிப்பிட்ட காலக்கெடுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்கின்றன. கடந்த மாதமே நெடுஞ்சாலைத் துறை கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகள் தேதி நிர்ணயம் செய்து தயாராகினர். நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ராஜா கூறுகையில், கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கடந்த மாதமே நோட்டீஸ் வழங்கி விட்டோம். கடந்த வாரம் எடுக்க தேதி குறித்திருந்தோம்.
கவர்னர் வருகையால் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கவில்லை. விரைவில் கம்பம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.