/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைவேவிஸ் மலை ரோட்டில் பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்
/
ஹைவேவிஸ் மலை ரோட்டில் பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்
ஹைவேவிஸ் மலை ரோட்டில் பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்
ஹைவேவிஸ் மலை ரோட்டில் பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 02:42 AM

கம்பம்: ஹைவேவிஸ் மலை ரோட்டில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் கட்டிய நெடுஞ்சாலைத் துறை, பணிகளை நிறைவு செய்யாமல் அறைகுறையாக விட்டு சென்றனர்.
சின்னமனூரில் இருந்து இரவங்கலாறு வரை 54 கி.மீ. தூரமாகும். இதில் ஹைவேவிஸ் வரை 33 கி.மீ. தூரமாகும். இவை பெரும்பாலும் மலை ரோடாக உள்ளது. 20 கேர்பின் வளைவுகளை கொண்ட இந்த ரோட்டில் சென்ட்ரல் கேம்ப்பிற்கு அடுத்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத் துறை தடுப்பு சுவர் கட்டியது.
ஆனால் ரோட்டிற்கும் தடுப்பு சுவருக்கும் இடையில் உள்ள பள்ளத்தில் மண் மேவி, ஆர்.சி. தளம் அமைக்க வேண்டும். அப்போது தான் மண் சரிவு ஏற்படாது. அத்துடன் தடுப்பு சுவர் கட்டி பணியை அரைகுறையாக விட்டு சென்றுள்ளனர்.
தினமும் சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கில் கார்கள், டூவீலர்களிலும் இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் விபத்து ஏற்படுவது நிச்சயம். எனவே ரோட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையில் பராமரிப்பு பணிகள் செய்ய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.