/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஹில்ஸ் அலவன்ஸ்' எதிர்பார்க்கும் போலீசார்
/
'ஹில்ஸ் அலவன்ஸ்' எதிர்பார்க்கும் போலீசார்
ADDED : பிப் 20, 2025 05:57 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட மலைப்பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார் 'ஹில்ஸ் அலவன்ஸ் எதிர்பார்த்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் குமுளி, ஹைவே, போடிமெட்டு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு ஆகியவை மலைப்பகுதி கிராமங்கள். மலைப்பகுதி கிராமங்களில் செயல்படும் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாருக்கு அரசு மூலம் 'ஹில்ஸ் அலவன்ஸ்' அனுமதிக்கப்படும். ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட மலைக்கிராம ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாருக்கு இன்னும் இந்த அலவன்ஸ் கிடைக்கவில்லை. போலீசார் கூறியதாவது: குமுளி, ஹைவே, போடிமெட்டு ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் 'ஹில்ஸ் அலவன்ஸ்' பெறுகின்றனர்.
கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு ஸ்டேஷன்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 'ஹில்ஸ் அலவன்ஸ்' இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினர்.