ADDED : ஜன 08, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி முத்துக்குமாரசாமி கோயிலை இடித்த தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் காடேஸ்வர சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து ஆண்டிபட்டியில் ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு நிர்வாகி மொக்கராசு, நகர பொதுச் செயலாளர் பகவதி ராஜ்குமார், நகர செயலாளர் முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தேனியில் மாவட்ட நிர்வாகிகள் உமையராஜன், முருகன் உள்பட 11 பேர், உத்தமபாளையத்தில் 12 பேர் மாவட்டத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

