/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உதவி ஆணையர் மீது ஹிந்து எழுச்சி முன்னணி புகார்
/
உதவி ஆணையர் மீது ஹிந்து எழுச்சி முன்னணி புகார்
ADDED : ஏப் 16, 2025 07:56 AM
தேனி : ஹிந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, நகரத் தலைவர் சிவராம், பொருளாளர் நாகராஜ், நகரச் செயலாளர் அழகுபாண்டி, நகரச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: வீரப்ப அய்யனார் மலைக் கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய போக்குவரத்து போலீசார் சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி வந்த வாகனம் நடைபயண பாதையில் பக்தர்கள் கூட்டத்திற்கு நடுவே நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் இருபுறமும் செல்ல முடியாமல் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அறநிலையத்துறை அதிகாரியின் வாகன டிரைவர், மற்றும் அலுவலர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொது மக்கள் குழப்பம் அடைந்தனர். இது விழாவின் அமைதி சூழலை கெடுப்பதாக அமைந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட வாகனத்தை இயக்கிய நபர், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர்.

