ADDED : டிச 19, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணியின் நகர தலைவர் சிவராமன் தலைமையிலான நிர்வாகிகள் ஏ.டி.எஸ்.பி., சுகுமாறனிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 22ல்,ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் 9ம் ஆண்டு பாரதமாதா தேர்பவனி விழா நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஊர்வலம் சாலைப்பிள்ளையார் கோயிலில் துவங்கி, அல்லிநகரம், நேரு சிலை வழியாக பங்களாமேடு சென்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரை சென்று நிறைவடைய உள்ளது என தெரிவித்துள்ளனர்.

