/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென் மண்டல ஐ.ஜி.,யிடம் ஹிந்து எழுச்சி முன்னணி மனு
/
தென் மண்டல ஐ.ஜி.,யிடம் ஹிந்து எழுச்சி முன்னணி மனு
ADDED : ஜன 04, 2025 04:39 AM
தேனி: தேனி மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணியின் நிறுவனத் தலைவர் பொன்ரவி, தலைவர் ராமராஜ், அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் மனு அளித்தனர்.
அதில், 2024ல் தேனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினோம். இதில் சில கமிட்டி பொறுப்பாளர்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் டிராக்டர்களில் ஒலிபெருக்கி குழாய்களை vபாறுத்தி விநாயகர் சிலைகளை ஏற்றினர். விழா முடிந்த உடன் இயக்கத தலைவர் சார்பில் தேனி எஸ்.பி.,யிடம் மன்னிப்பு கடிதம் வழங்கப்பட்டது.
அதன் பின் அலுவலகத்திற்கு சென்று வழக்குகளை மாற்றி, விவசாய டிராக்டர்களை ஸ்டேஷன் ஜாமினில் விட பலமுறை தெரிவித்தோம்.
ஆனால், டிராக்டர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதால் ஆர்.பி.ஆர்., மூலம் பெற்று கொள்ளுங்கள் எனக் கூறினார். இதுவரை 21 டிராக்டர்களில் 2 வண்டிகளை மட்டுமே மீட்டுள்ளோம்.
மேலும் சில வண்டிகளை மீட்கும் முயற்சியில் உள்ளோம். அந்த டிராக்டர்களின் உரிமையாளர்கள் வாடகை பெறாமல் ஊர்வலகத்திற்கு இலவசமாக வழங்கி பங்கேற்றனர்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, எனவே, வழக்குகளை மாற்றி, டிராக்டர்களை ஸ்டேஷன் ஜாமினில் விட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

