/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதராஜப் பெருமாள் கோயிலில் பவித்திர உற்ஸவம் பூஜை
/
வரதராஜப் பெருமாள் கோயிலில் பவித்திர உற்ஸவம் பூஜை
ADDED : நவ 27, 2024 08:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நவ.20 ல் பாலாலய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து
நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் மற்றும் கோயிலில் எந்த விதமான தோஷங்கள் ஏற்பட்டாலும் அவைகள் நீங்கிடவும், உலக நன்மைக்காக பூஜைகள் நடந்தது. நேற்று வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவிக்கு, பவித்திர உற்ஸவம் பூஜையில் அமுத நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (நவ.27) வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை நடக்க உள்ளது.