/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புனித ஆரோக்கியமாதா பிறந்த நாள் பெருவிழா கொடியேற்றம்
/
புனித ஆரோக்கியமாதா பிறந்த நாள் பெருவிழா கொடியேற்றம்
புனித ஆரோக்கியமாதா பிறந்த நாள் பெருவிழா கொடியேற்றம்
புனித ஆரோக்கியமாதா பிறந்த நாள் பெருவிழா கொடியேற்றம்
ADDED : செப் 01, 2025 02:39 AM

கம்பம்: கம்பம் புனித அன்னை ஆரோக்கிய மாதா சர்ச்சில் மாதா பெரு விழாவிற்கான கொடி ஏற்றும் விழா, நேற்று மாலை நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கம்பம் புனித அன்னை ஆரோக்கிய மாதா சர்ச்சில் மாதா அவதரித்த நாள் பெரு விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பாதிரியார் பாரிவளவன் தலைமையில் புனித செபஸ்தியார் குருசடியில் இருந்து ஜெபமாலையுடன் கொடி ஊர்வலம் நடந்தது. மாதாவின் திரு உருவம் பொறித்த கொடியை ரயில்வே காலனி பங்கு பணியாளர் அருள் பணி தேவா, பாக்கியபுரம் மத்தியாஸ் ஆகியோர் சர்ச் வளாகத்தில் உள்ள புனித மரத்தில் ஏற்றினர்.
இத்திருவிழா செப்.3 வரை நடக்க உள்ளது. தினமும் மாலையில் சிறப்பு ஜெப பிரார்த்தனைகள், செப்.7ல் தேர்ப்பவனி நடக்கும். விழா ஏற்பாடுகளை சர்ச் நிர்வாகம் செய்து வருகின்றனர்.