தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் ஆர்வம்

 போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் ஆர்வம்

 போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் ஆர்வம்


ADDED : செப் 20, 2026 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 12:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 'அரண் 26' தலைப்பில் ஊர்க்காவல் படையினருக்கான 30வது மாநில பணித்திறன், விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 சரகங்களில் இருந்து 1400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கபடி, 200 மீ., ஓட்டப்பந்தயம், வாலிபால், நீளம் தண்டுதல் போட்டிகளில் வீரர்கள் ஆர்வமாக விளையாடினர். 3 நாட்கள் நடக்கும் இப்போட்டிகள் இன்று நிறைவடைகிறது. இன்று மாலை போலீஸ் டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் பங்கேற்க உள்ளார்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்: ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மன்ஜித் சிங் (சென்னை) முதலிடம், விக்னேஷ் ராஜேந்திரன் (சென்னை) 2-வது இடமும், ஆனந்த் (மதுரை) மூன்றாவது இடமும் பிடித்தனர். மகளிர் பிரிவில் திருச்சி பிரவீனா முதலிடம் பிடித்தார். தீதடுப்பு போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடமும், திருநெல்வேலி அணி 2ம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவுகளில் கபடி போட்டி திருநெல்வேலி அணி முதலிடம், தஞ்சாவூர் அணி 2ம் இடம் பிடித்தன. வாலிபால் போட்டியில் சென்னை அணி முதலிடமும், தஞ்சாவூர் அணி 2ம் இடம் வென்றன. மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் பூமிகா முதலிடமும், குந்தவை 2ம் இடமும் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us