ADDED : செப் 20, 2026 12:42 AM
தேனி: தேனி பென்னிகுவிக் நகர், கொட்டக்குடி ஆற்றங்கரையில் சடையால் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மணிகண்டன் 56, பூஜாரியாக உள்ளார். நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு சென்ற போது வாலிபர் கோயிலினுள் இருந்தார். அவரை 'யார் நீ, இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என கேட்ட போது அவர் கம்பால் பூஜாரியை தாக்கினார். இந்த வீடியோ வைரலானது. மணிகண்டன் புகாரில் தேனி போலீசார் விசாரித்தனர்.
நகர்பகுதியில் சுற்றி திரிந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்த போது அந்த வாலிபர் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணையில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த மனோஜ் 22, என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது. அவர் மீது க.விலக்கு, பழனிசெட்டிபட்டி, கம்பம் வடக்கு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு உள்ளது. அவரை தேனியில் உள்ள அரசு மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
