ADDED : செப் 20, 2026 12:42 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வேலப்பர் கோயில் பழங்குடி மக்கள் போதிய வாழ்வாதாரம் இன்றி உள்ளனர். விவசாயம் செய்து வந்த காரம்பாறை நிலத்தை அவர்களுக்கு வழங்கவும், வருஷநாடு அருகே உப்புத்துறை பழங்குடியினர் விவசாயம் செய்து வந்த யானை கெஜம் பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கவும், நொச்சி ஓடை பழங்குடி மக்களுக்கு குடியிருக்க அரசு வீடி கட்டி கொடுக்க வலியுறுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர் கரந்தன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் மணவாளன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட செயற்குழு பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, நகர செயலாளர் முனீஸ்வரன் உட்பட பல பேசினர்.
