ADDED : மார் 27, 2025 05:15 AM
பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில் பழப்பயிர்களில் கிளை படர்வு மேலாண்மை மூலம் உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் ராஜாங்கம்,' மாவில் உற்பத்தி திறனை மேம்படுத்த நவீன தொழில் நுட்பங்கள்' பற்றி பேசினார். பேராசிரியர்கள் சரஸ்வதி, முத்துலட்சுமி 'மாவில் நீர்,உர மேலாண்மை' பற்றியும், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோயை கட்டுப்படுத்த பேராசிரியர் சுகன்யா கன்னா விளக்கம் அளித்தார்.
பேராசிரியர் பியூலா பழப்பயிர்கள் அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி பேசினார்.
மாநில திட்டம் துணை இயக்குனர் சின்னகண்ணு, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 110 விவசாயிகள் பங்கேற்றனர். பேராசிரியர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.-