/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டல் உரிமையாளர் உடல் வராகநதியில் மீட்பு
/
ஓட்டல் உரிமையாளர் உடல் வராகநதியில் மீட்பு
ADDED : ஜன 26, 2025 06:48 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் 47. மேல்மங்கலம் வைகை அணை ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார்.
ஜன.22ல் வியாபாரம் செய்து விட்டு இரவு 11:00 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
காலையில் இவரது மனைவி பாண்டீஸ்வரி 36. பார்க்கும்போது தர்மராஜ் காணவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் தனது கணவரை காணவில்லை என ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு மேல்மங்கலம் வராகநதியில் தர்மராஜ் உடல் மிதந்தது.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், தர்மராஜ் கொலையா, தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.-